பாரதிராஜா படத்தால் ஏற்பட்ட வலி!! ஆளவிடுங்க சாமி-ன்னு அர்த்தராத்திரியில் ஓட்டம் பிடித்த நடிகை ராதிகா!!
தமிழ் சினிமாவில் 80, 90களில் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ராதிகா. இயக்குனர் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்ட கலைஞர்களில் ராதிகாவும் ஒருவர்.
கிழக்கே போகும் ரயில் படத்தில் நடித்தில் நடன இயக்குனராக பணியாற்றிய புலியூர் சரோஜா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பல விசயங்களை பகிர்ந்துள்ளார்.
அப்படி ஒருநாள் அர்த்த ராத்திரி இருக்கும் போது நடிகை ராதிகா படப்பிடிப்பு தளத்தில் இருந்து பெட்டிப்படுக்கையோடு கிளம்ப தயாராகிவிட்டார்.

அனைவரும் தூங்கிக்கொண்டிருக்கும் போது ராதிகாவை தற்செயலாக பார்த்திருக்கிறார் புலியூர் சரோஜா. "என்ன ஆச்சு எங்க போற என்று அவர் கேட்டதற்கு ராதிகா, அக்கா என்ன விட்ருங்க-கா, எனக்கு சினிமாவே வேண்டாம் என்னால ஆடவே முடியல ரொம்ப கால் வலிக்குது. என் ஊருக்கே நான் போறேன்" என்று கூறினாராம்.
உடனே அவரை சமாதானப்படுத்தி இருக்க கூறினேன். பின் மாஞ்சோலை கிளிதானோ பாடலில் பொறுமையாக கற்றுக்கொடுத்து பரத நாட்டியம் ஆடும் போது வலியில்லாமல் இருக்க மருந்தும் தேய்க்க கொடுத்தேன் என்று புலியூர் சரோஜா கூறியிருக்கிறார்.
