பாக்யராஜ் படத்தில் செஞ்ச பெரிய தப்பு!! ரகசியத்தை உடைத்த நடிகை ராதிகா
80, 90களில் மிகப்பெரிய வெற்றிப்படங்களை கொடுத்தவர் கே பாக்யராஜ். அவர் படத்தில் நடிக்க வேண்டும் என்று பலர் பாக்யராஜ் அலுவலகத்தில் காத்து இருப்பார்கள். அப்படி அவர் இயக்கம் மிகப்பெரிய இடத்தை மக்கள் மத்தியில் பெற்று வரும்.
அந்தவகையில் நடிகை ராதிகா பாக்யராஜ் இயக்கிய தாவணி கதவுகள் படத்தில் நடித்துள்ளார். இப்படம் தான் பாக்யராஜுக்கு மிகமுக்கிய படமாக அமைந்தது. சிவாஜி கணேசனும் முக்கிய ரோலில் நடித்ததால் அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள இப்படம் உதவியதாகவும் பாக்யராஜ் கூறியிருந்தார்.
சமீபத்தில் நடிகை ராதிகா பேட்டியொன்றில், பாக்யராஜை பார்த்தாலே எனக்கு சிரிப்பு வந்துவிடும், அதனால் படம் முழுக்க அவரை நேருக்கு நேராக பார்க்காமல் நடித்தேன் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் இது படம் பார்க்கும் பலருக்கு தெரியாமல் ரகசியமாகவே இருந்தது என்று ராதிகா தெரிவித்துள்ளார்.