ஒரு பக்கம் பூஜா ஹெக்டே, மறுபக்கம் நோரா ஃபதேஹி! 90 கோடி பட்ஜெட்டில் உருவாகும் காஞ்சனா 4

Raghava Lawrence Pooja Hegde Nora Fatehi
By Kathick Feb 10, 2025 02:30 AM GMT
Report

ராகவா லாரன்ஸ் என்று சொன்னால் உடனடியாக நம் நினைவுக்கு வருவது, அவருடைய நடனம் மற்றும் காஞ்சனா படங்கள் தான்.

கடைசியாக வெளிவந்த காஞ்சனா 3 படமும் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இதை தொடர்ந்து காஞ்சனா 4 எப்போது என ஆவலுடன் ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

ஒரு பக்கம் பூஜா ஹெக்டே, மறுபக்கம் நோரா ஃபதேஹி! 90 கோடி பட்ஜெட்டில் உருவாகும் காஞ்சனா 4 | Raghava Lawrence Kanchana 4 Movie Budget

இந்த நிலையில், காஞ்சனா 4 திரைப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் துவங்கியுள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் நோரா ஃபதேஹி இரண்டு கதாநாயகிகள் நடித்து வருகிறார்கள்.

காஞ்சனா 4 திரைப்படத்தின் பட்ஜெட் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் ரூ. 90 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படுவதாக பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். இப்படத்தை பாலிவுட்டை சேர்ந்த கோல்டு மைன்ஸ் என்கிற நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.