ஐந்து நடிகைகளுடன் ஒரே நடிகர்.. பக்காவான பிளான்
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் ராகவா லாரன்ஸ். இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் சந்தரமுகி 2. பி. வாசு இயக்கும் இப்படத்தை லைக்கா நிருவனம் தயாரிக்கிறது.
இப்படத்தில் வடிவேலு, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்நிலையில் இப்படத்தில் மொத்தம் ஐந்து கதாநாயகிகள் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எற்கனவே இப்படத்தில் லட்சுமி மேன்னன் ஹீரோயினாக கமிட்டாகி இருக்கிறார் என தகவல் தெரியவந்த நிலையில் இப்படதில் மொத்தம் ஐந்து ஹீரோயின்கள் நடிப்பதாக தெரியவந்துள்ளது.
லட்சுமி மேனனை தொடர்ந்து அஞ்சலி இப்படத்தில் நடிக்கிறாராம். அவர் மட்டுமின்றி, மஹிமா நம்பியார், சிருஷ்டி டாங்கே மற்றும் மஞ்சிமா மோகன் என ஐந்து ஹீரோயின்கள் நடிக்கிறார்கள் என கூறப்படுகிறது. இதன்முலம், ஒரே நேரத்தில் ஐந்து நடிகையுடன் இணைந்துள்ளார் ராகவா லாரன்ஸ்.