6 ஆடி உயரம்..உனக்கெல்லாம் ஹீரோயின் எங்கிருந்து தேட!!தடையாக இருந்ததை உடைத்த ரகுவரன்..

Raghuvaran Actors Tamil Actors
By Jai Aug 21, 2026 10:30 AM GMT
Report

ரகுவரன்

தமிழ் சினிமாவில் சில நடிகர்களின் தோற்றம், குரல், வித்தியாசமான உடல்மொழி, அமைதியான அச்சத்தை ஏற்படுத்தும் நடிப்பு உள்ளிட்ட தனக்கென ஒரு பாணியை உருவாக்கி பிரபலமானவர் தான் நடிகர் ரகுவரன். ஹீரோ, வில்லன், குணச்சித்திர ரோலில் நடித்து வந்த ரகுவரன், கடைசியாக யாரடி நீ மோகினி படத்தில் நடித்து மரணமடைந்தார்.

6 ஆடி உயரம்..உனக்கெல்லாம் ஹீரோயின் எங்கிருந்து தேட!!தடையாக இருந்ததை உடைத்த ரகுவரன்.. | Raghuvaran Height Struggle Tamil Cinema

தற்போது ரகுவரன் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிக்க ஆரம்பித்தபோது வாய்ப்பு தேடச் சென்றபோது ஆறு அடிக்கும் மேல் உயரம் கொண்டதால் பலரும் கதாநாயகன் தோற்றத்தில் பொருத்திப் பார்க்க தயங்கினர்.

அவர் அளித்த பேட்டியில், நீ இவ்வளவு உயரமாக இருக்கிறாய்? உனக்கு ஹீரோயினை எங்கிருந்து தேடுவது என்று சிலர் என்னிடம் கூறினார்கள். அதுமட்டுமில்லாமல் என் தோற்றத்தை வைத்து 'ஜிப்ஸி' என்றும் குறிப்பிடுவார்கள்.

சினிமாவில் நடிக்க ச்வேடும் என்ற கனவுடன் வந்த ஒருவருக்கு இதுபோன்ற விமர்சனங்கள் நிச்சயம் எளிதானதாக இருந்திருக்காது. ஆனால், காலம் செல்ல செல்ல ரகுவரனின் தோற்றமே அவருக்கான மிகப்பெரிய பலமாக மாறியது.

6 ஆடி உயரம்..உனக்கெல்லாம் ஹீரோயின் எங்கிருந்து தேட!!தடையாக இருந்ததை உடைத்த ரகுவரன்.. | Raghuvaran Height Struggle Tamil Cinema

வழக்கமான ஹீரோ கதாபாத்திரங்களை தாண்டி, வில்லன், குணச்சித்திர ரோல்களில் அவர் காட்டிய நடிப்பு கவனத்தை ஈர்த்தது. அதேபோல் பாட்ஷாவில் மார்க் ஆண்டனி படத்தில் ரோலும் மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. முதல்வன் படத்திலும் வித்தியாசமான தோற்றத்தை கொடுத்து டாப் லெவலுக்கு சென்றார். கடைசியாக, யாரடி நீ மோகனி படத்தின் தோற்றமும் இன்றும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.