கடற்கரையில் உல்லாசமாக காத்துவாங்கும் பிக் பாஸ் ரைசா.. எப்படி போஸ் கொடுத்துள்ளார் பாருங்க

bigg boss raiza viral pic beach pic
By Kathick Oct 22, 2021 11:50 AM GMT
Report

கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரைசா. ஒரே நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக இடம்பிடித்தார். பிக் பாஸ் வாய்ப்பினை சரியாக பயன்படுத்திய நடிகை ரைசாவிற்கு முதல் படமாக பியார் பிரேம காதல் அமைந்தது. இப்படத்தில் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் நடித்திருந்தார்.

ஆனால் இதற்கும் முன்பே தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன்பின் தற்போது தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாகவும், சோலோ ஹீரோயினாக நடித்து கலக்கி வருகிறார்.

ஆம், தற்போது இவர் நடிப்பில் ஆலிஸ், அப்.ஐ.ஆர், தி சேஸ், காதலிக்க யாருமில்லை உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது குறிப்பிடத்தக்கது. நடிகை ரைசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்கள், அல்லது வீடியோக்களை பதிவு செய்கிறார். அந்த வகையில் தற்போது கடற்கரையில் காத்துவாங்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

கடற்கரையில் உல்லாசமாக காத்துவாங்கும் பிக் பாஸ் ரைசா.. எப்படி போஸ் கொடுத்துள்ளார் பாருங்க | Raiza Beach Picture