நடிகை ரைசா முகம் கேவளமானதற்கு இதுதான் காரணமாம்! மானத்தை வாங்கிய பெண் மருத்துவர்..

raiza wilson bairavi
By Edward Apr 28, 2021 10:50 AM GMT
Report

கடந்த வாரம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது நடிகை ரைசா முகம் வீங்கி பார்க்கவே முடியாமல் போனதுதான். இதற்கு காரணம் ஒரு பெண் பியூட்டி டாக்டர் தான் என்று தெரிவித்து பதிவினை பதிவிட்டிருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து வருபவர் நடிகை ரைசா. சமீபத்தில் மாலத்தீவில் உல்லாசமாக இருந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

இந்நிலையில், தன்னுடைய முகத்தை அழகாக மாற்ற ஒரு அறுவை சிகிச்சை செய்துள்ளார். ஆனால் சில நாட்களிலேயே அது செட்டாகாமல் முகத்தை கேவளமாக்கியுள்ளது. இதனால் அந்த பியூட்டிஷன் பெண் மீது புகாரளித்திருந்தார் ரைசா.

தற்போது அந்த மருத்துவர் பேட்டியொன்றில், அறிவுரைப்படி மது அருந்தக்கூடாது, புகைபிடிக்கக் கூடாது என்றெல்லாம் கட்டளை தெரிவித்துள்ளனர். ஆனால் ரைசா, அறுவை சிகிச்சை முடிந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே மது அருந்தியுள்ளார். இதன் காரணமாக அவரது முகம் வீங்கி பார்ப்பதற்கு அலங்கோலமாக மாறிவிட்டார்.

அழகுக்கு ஆசைப்பட்டு தன்னுடைய முகம் போய்விட்டதே எனவும், இனிமேல் பட வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகத்தில் எப்படியாவது என் மீது பழியைப் போட்டு ஒரு கோடி நஷ்ட ஈடு வாங்கிவிட வேண்டும் எனவும் வழக்கு தொடர்ந்துள்ளார். இதை பலர் ரைசாவை கண்டடித்து கிண்டலடித்தும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.