கர்ப்பமான ஜெஸ்ஸி.. அந்தர் பல்டி அடித்த ஆதி, அர்ச்சனா.. குழப்பத்தில் சிவகாமி குடும்பம்..

Star Vijay Serials
By Edward Aug 25, 2022 06:21 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் ராஜா ராணி 2. சரவணன், சந்தியா முக்கிய ரோலாக இந்த சீரியலில் இருந்து வருகிறார்.

விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் ஜெஸ்ஸி மயக்கம் போட்டு விழ, கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்கிறார் சரவணனின் பாட்டி. கர்ப்பத்திற்கு காரணம் ஆதி தான் என்று உண்மையை உடைத்துள்ளார் ஜெஸ்ஸி.

முழு குடும்பமும் ஆதியை முறைத்து பார்க்க யார் இவள் என்று கண்டபடி கேட்டுள்ளனர். ஆனால், ஆதி எனக்கு இந்த பொண்ணை மூணு முறை தான் பார்த்திருக்கிறேன். மற்றபடி எனக்கும் அவளுக்கு ஒன்னும் இல்லை என்று அந்தர் பல்டி அடித்து உண்மையை மறைக்கிறான்.

இதனால் வேதனையில் ஜெஸ்ஸி அர்ச்சனாவையும் கேட்கிறார். உங்களுக்கு தான் நாங்கள் காதலிக்கும் விசயம் தெரியுமே சொல்லுங்கள் என்று கேட்க எனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறி அமைதியாக இருக்கிறார்.

இதனால் ஜெஸ்ஸி ஒரு கெட்ட பெண் என்ற பிம்பத்தை உருவாக்கி கோபத்தில் வெளியேறுகிறார். இதனை போலிஸ் பாணியில் சந்தியா கண்டிபிடிப்பது தான் வரும் எபிசோட்டில் நடக்குமே என்று ரசிகர்கள் கிண்டல் செய்கிறார்கள்.