இப்படியாடா ஜூம் பண்ணி பாப்பீங்க! நஸ்ரியா- நயன் தாராவை நோட் பண்ணி லீக் செய்த நெட்டிசன்கள்

atlee arya nayanthara nazriya rajarani unknownfact
By Edward Mar 16, 2022 12:43 AM GMT
Report

தமிழ் சினிமாவில் காப்பி இயக்குனர் என்ற பெயரை ஏஆர் முருகதாஸிற்கு பிறகு பிரம்மாண்ட இயக்குனரிடன் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லீ அந்த பெயரை பெற்றார். ராஜா ராணி படத்திற்கு பிறகு விஜய்யை வைத்து மூன்று படங்களை கொடுத்து தான் அந்த காப்பி இயக்குனர் என்ற பட்டப்பெயரை பெற்றார்.

இதன்காரணமாகவே விஜய் அவரை ஒதுக்கியும் வருகிறார். ஆர்யா, ஜெய், நயன் தாரா, நஸ்ரியா, சத்யராஜ் போன்ற நட்சத்திரங்கள் நடித்து நல்ல வரவேற்பு பெற்ற இப்படம் மிகப்பெரிய வசூல் பெற்றது. இந்நிலையில் ராஜா ராணி படத்தில் ஒரு விஷயத்தில் ஆரம்பித்தில் இருந்தே கவனிக்க தவறிவிட்டோம். தற்போது நெட்டிசன்கள் அதை ஜூம் செய்து பார்த்துவிட்டு வைரலாக்கி வருகிறார்கள்.

படத்தின் கதையில் ஆர்யாவின் காதல் பிளாஸ்பேக்கில் நஸ்ரியா வைத்திருந்த ஸ்கூட்டி நயன் தாரா வைத்திருப்பது தான் அந்த முக்கியமான விஷயம். இறந்தபின் நஸ்ரியாவின் பைக் எப்படி நயன் தாரா கல்லூரி படிக்கும் போது வைத்திருப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒரே காலகட்டத்தில் அந்த காட்சி அமைகையில், அட்லீ வேறொரு ஸ்கூட்டியை பயன்படுத்தாமல் இப்படி சொதப்பி மாட்டிக்கிட்டாரே என்று கிண்டல் செய்து வருகிறார்கள். 

Gallery