குழந்தைகள் வேண்டாம்னு சொன்னேன்...தேவயானி கேக்கல!! கணவர் ராஜகுமாரன் ஓபன் டாக்..
தமிழ் சினிமாவில் 90களில் டாப் நடிகையாக திகழ்ந்து தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து வருபவர் தான் நடிகை தேவயானி. இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்த தேவயானி, இரு பெண் குழந்தைகளை வளர்த்து வருகிறார்.

இளைய மகள் இனியாவை பாடகியாக்கிய தேவயானி சமீபத்தில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், கடுகு போன்ற படங்களில் நடித்தார். சமீபத்தில் தேவயானி கணவர் ராஜகுமாரன் அளித்த பேட்டியொன்றில் தன் மகள்கள் குறித்து பேசியுள்ளார்.
அதில், திருமணமாகி குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை, ஏனென்றால் இந்த மோசமான உலகத்தில் எந்த தைரியத்தில் என்னை கொண்டு வந்தீர்கள், நான் எப்படி போராடுவேன் எப்படி கஷ்டப்படுவேன் என்று உங்களுக்கு கொஞ்சம்கூட மனசாட்சியே இல்லையா? என்று குழந்தைகள் கேட்டால் நான் என்ன அப்தில் சொல்வது.

தேவயானியிடம் கூட பசங்க வேண்டாம் என்றுதான் நான் சொன்னேன், ஆனால் அவர்தான் கேட்கவே இல்லை என்று கூறியிருக்கிறார்.