ஆஸ்கர் விருதுக்காக இத்தனை கோடி செலவா!! வாய்ப்பிளக்க வைத்த பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி..

S. S. Rajamouli RRR
By Edward Mar 27, 2023 12:15 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக மிகப்பெரியளவில் பிரபலமாகி வருபவர் ராஜமவுலி. நான் ஈ, மகதீரா, பாகுபலி, ஆர் ஆர் ஆர் உள்ளிட்ட பிரம்மாண்ட பட்ஜெட் படங்களை இயக்கி வசூல் சாதனையை படைத்துள்ளார்.

ஆர் ஆர் ஆர் படம் உலகளவில் பிரபலமாகியதோடு பல விருதுகளை பெற்று வந்தது. அந்தவகையில் இப்படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்காக மிகவும் உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

அந்த விருதினை வாங்க படக்குழுவினர் காசுக்கொடுத்து தான் ஆஸ்கரை பெற்றார்கள் என்ற விமர்சனமும் எழுந்து சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து ஆர் ஆர் ஆர் படத்தின் இயக்குனர் ராஜமவுலியின் மகன் கார்த்திகேயன் வாய்ந்திறந்து பேசியிருக்கிறார்.

சுமார் 83 கோடி செலவு செய்து ஆஸ்கர் விருதினை வாங்கினோம் என்ற செய்தியை கேட்டு ஷாக்கானதாகவும் ஆஸ்கரை பணம் கொடுத்து வாங்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனால் ஆஸ்கர் விருதுக்காக ஆர் ஆர் ஆர் படத்தை பரப்புவதற்காக சுமார் 8.5 கோடி செலவு செய்திருப்பதாகவும் கூறியுள்ளார். படத்தினை நியூயார்க் நகரில் கூடுதலாக சிறப்பு காட்சிகளை திரையிட வேண்டிய சூழலால் செலவு அவ்வளவு அதிகரித்தது என்றும் கூறியிருக்கிறார்.