பரிதாப நிலையில் நடிகர் ராஜசேகரின் இரண்டாவது மனைவி.. கைவிட்ட சினிமா சங்கங்கள்
பிரபல நடிகர் ராஜசேகரின் மனைவி தான், தாரா. இவர்களுக்கு பிள்ளைகள் இல்லை. ராஜசேகரன் இறப்பதற்கு முன் சென்னை வடபழனியில் லோன் போட்டு ஒரு ஃபிளாட் வாங்கியிருந்தார்.
தற்போது ராஜசேகரன் இல்லாத நிலையில், வீடு வாங்கிய கடனை கட்டச் சொல்லி வங்கி நெருக்கடி தர, வேலையும் இல்லாமல், கடனையும் கட்ட வழி தெரியாத நிலையில் பரிதவித்து வருகிறார் தாரா.
இந்நிலையில் தாரா சமீபத்தில் அளித்த பெட்டியில் :
லோன் போட்டு வீட்டை என் கணவர் ஒரு வீட்டை வாங்கினார். நாள் அந்த வீட்டுல ஒரு நாள் கூட வசிக்கக் கொடுத்து வைக்கலை. கிரகப்பிரவேசம் பண்றதுக்குள்ளேயே இறந்துட்டார். கடைசி கட்ட மருத்துவ செலவுக்குக்கூட கையேந்தற நிலையிலதான் நான் இருந்தேன்.
சொந்த பந்தங்கள் அவர் இருந்தப்பவே உதவலைன்ன போது இப்ப எப்படி உதவுவாங்க? சினிமாவுல, சீரியல்ல இருந்திருக்காரேன்னு டைரக்டர் சங்கம், டிவி நடிகர் சங்கம்னு போய் ஏதாச்சும் உதவ முடியுமான்னு கேட்டேன். எங்கேயும் எந்தத் தீர்வும் கிடைக்கலை. அவர் கடனை வாங்கி வச்சுட்டுப் போனா யார் கட்டுவாங்கன்னு சாதாரணமா சிலர் கேட்டுட்டாங்க.
எந்த உதவியும் கிடைக்காததால வேற வழி இல்லாம அவரு ஆசையா வாங்கின வீட்டை இப்ப அவரு கடைசியா நடிச்ச 'சத்யா' சீரியல் தயாரிப்பாளருக்கு வாடகைக்கு விட்டுட்டேன். கொஞ்சம் தள்ளி ஒரு சின்ன வீட்டை வாடகைக்கு எடுத்து நான் இருக்கேன். அவரு தர்ற வாடகையிலதான் பாதி என் வீட்டு வாடகைக்கும் மீதி வயித்துக்கும் போகுது. இன்னும் எத்தனை நாளைக்கு இந்தப் பொழப்புன்னு தெரியலை என்று கூறியுள்ளார்.