ரஜினிகாந்த் இறந்தாலுமா...என்ன பேச்சு இது, ராஜ்மோகனை வச்சு செய்த நெட்டிசன்கள்
ராஜ் மோகன்
ராஜ்மோகன் விஜய் தொடங்கியுள்ள தவெக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்து வருகின்றார். இவர் ஆரம்பத்தில சில யுடியூப் சேனல்களில் வீடியோக்கள் செய்து வந்தாலும், பிறகு மெல்ல சினிமாவில் தலையை காட்ட தொடங்கினார்.
அதை தொடர்ந்து படம் இயக்குவது வரை வளர்ந்தார், தற்போது விஜய் கட்சியில் கொள்கை பரப்பு செயலாளராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் இவர் ஒரு கட்சி கூட்டத்தில், இறந்தது அஜித் குமாராக இருந்தாலும் எங்கள் தலைவர் அவருகாக பேசுவார் என கூறினார்.
இதை கேட்ட பலரும் என்ன இப்படி பேசுகிறார், விஜய்க்கு போட்டி நடிகர் அஜித், அந்த அர்த்தத்தில் பேசுகிறாரோ என கமெண்ட் அடிக்க, அதற்கு ராஜ் மோகன் விளக்கம் தருகிறேன் என, இறந்தது ரஜினிகாந்த் ஆக இருந்தாலும் எங்கள் தலைவர் பேசுவார் என மேலும் கூற, இணையமே பற்றி எரிய ஆரம்பித்துவிட்டது.
அது எப்படி ரஜினி குறித்து பேசலாம் என கொந்தளிக்க, ராஜ் மோகன் அதற்காக வருத்தம் தெரிவித்து ஒரு விடியோ ஒன்றை வெளியிட, ரஜினி ரசிகர்கள் தாண்டி நெட்டிசன்கள் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.