அப்ப புரியல இப்போ புரியுது! பீஸ்ட் பார்த்துவிட்டு சோகத்தில் பேட்டி கொடுத்த விஜய் ரசிகர்..
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படம் தமிழகத்தில் மட்டும் 800க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இன்று காலை 4 மணியில் இருந்து ரிலீஸாகி வருகிறது.
இதுவரை நடந்து முடிந்த காட்சிகளை கண்ட ரசிகர்கள் நல்ல விதமான கருத்துக்களை கூறினாலும் விமர்சனம் ரீதியாக படுமோசமான கருத்துக்களையே பெற்று வருகிறது. மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படி விஜய்யை வைத்து நெல்சன் செஞ்சிவிட்டாரே பலர் புலம்பி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் நெல்சன் அளித்த பேட்டியில், விஜய்க்கு கதை வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே கூறினேன் என்று கூறியிருந்தார்.
மேலும் விஜய்யை பற்றி எந்த தகவலும் தெரியாமல் பேட்டியெடுத்த போதே யோசித்திருக்க வேண்டும் படம் எப்படி சொதப்பும் என்று தலையை பிய்த்துக்கொண்டு வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.
கடைசியில் அக்கடத்தேசத்து இயக்குனராவது திருப்தி அளிப்பார் என்ற ஆறுதலில் இருந்து வருகிறார்கள்.
முன்னாடி நான் பேசின வீடியோவ டெலீட் பண்ணிடுங்க…
— Zee Tamil News (@ZeeTamilNews) April 13, 2022
படம் பார்த்தபின் #Vijay ரசிகர் வேண்டுகோள்…#BeastMovie #BeastModeON #BeastReview #ThalapathyVijay? #Beast
#ZeeTamilNews pic.twitter.com/aaFwvQzlLG
பீஸ்ட் | மென்ட்டல் தனமா எடுத்து வெச்சிருக்காங்க. கோவம் வருது | ரசிகனின் மனநிலை..#BeastMovie | #Beast | #ZeeTamilNews pic.twitter.com/fgLl9bxrtL
— Zee Tamil News (@ZeeTamilNews) April 13, 2022