மகளின் குளறுபடியால் கடும் கோபத்தில் ரஜினி.. அப்பா மகள் இடையே மோதலா?
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.
தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக தயாராகும் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடிக்கவுள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி சோசியல் மீடியா பக்கத்தில் வைரலானது. இதற்கு சிலர் போஸ்டர் மோசமாக இருக்கிறது என்று விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங்காக ரஜினி மும்பை சென்றுள்ளார். அங்கு அவர் மூன்று நாட்கள் மட்டுமே ஷூட்டிங் சென்றாராம். மற்ற நேரம் சும்மாவே இருந்துள்ளாராம்.
இதற்கு காரணம் ஐஸ்வர்யாவின் நிர்வாகத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதனால் கோபம் அடைந்த ரஜினிகாந்த் ஐஸ்வர்யாவிடம் கரராக பேசிவிட்டு மும்பையில் இருந்து திரும்பி சென்னை வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.