விசுவாசத்தையே கலாய்த்த ரஜினிகாந்த்! கடைசில இப்படி கவுத்திட்டீங்களே...

annaatthe viswasam rajinikanth ajithkumar siruthaisiva
By Edward Nov 15, 2021 12:00 PM GMT
Report

இந்த ஆண்டு தீபாவளி அன்று மக்களுக்கு பரிசாக சூப்பர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் வெளியானது. சிறுத்தை சிவா இயக்கத்தில் நயன் தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர்.

படம் வெளியாக நல்ல வரவேற்பை பெற்றும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இதுவரை 150 கோடி வசூலை நெருங்கியுள்ளது. இந்நிலையில் தன் மகள் ஆரம்பித்துள்ள ஹுட் ஆப்பில் ரசிகர்களுடன் பேசியுள்ள்ளார் ரஜினிகாந்த்.

இயக்குநர் சிவா தன்னை பார்த்து பேசியது போல் சொல்லி அடித்திருக்கிறார் அண்ணாத்த படத்தில். விசுவாசம் படத்தினை அப்படத்தின் தயாரிப்பாளரின் அனுமதியுடன் பார்த்தேன்.

அவ்வளவு பேரிய ஹிட் ஆகுறதுக்கு என்ன காரணம் என்று பார்க்க படத்தினை பார்த்தேன். போகபோக க்ளைமேக்ஸ் வர என்னை அறியாமல் கைத்தட்டினேன். அதிலிருந்து சிறுத்தை சிவாவை கூப்பிட்டு விசுவாசம் போல ஒரு படத்தினை கொடுங்கள் என்று கேட்டேன் என்று ஸ்வாரஷ்யமாக கூறியுள்ளார் சூப்பர் ஸ்டார்.