ரஜினி, கமலை பார்த்து கத்துக்கோங்க? பல வருடங்களாக ரசிகர்களை ஏமாற்றும் விஜய், அஜித்...

Ajith Kumar Kamal Haasan Rajinikanth Vijay Vikram Movie
By Edward May 30, 2022 02:35 AM GMT
Report

தமிழ் சினிமாவின் ஒரு உச்ச நட்சத்திர நடிகர்களாக 80களில் இருந்து கொடிக்கட்டி பறந்து வந்தவர்கள் கமல் ஹாசன், ரஜினிகாந்த். ஆரம்பத்தில் எப்படி இருவரும் இணை பிரியாத நண்பர்களாக இருந்தார்களோ தற்போது வரை அது இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

அதை சமீபத்தில் ரஜினி, கமல் நிருபித்துள்ளனர். கமல் ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் உலக நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீட்டிற்கு சென்று சந்தித்து பேசியுள்ளார். அவருடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜும் சென்று வாழ்த்துக்களை பெற்றுள்ளார்.

இப்படியொரு நட்பில் இருக்கும் கமல் ரஜினி இருவரும் வருடத்தில் பலமுறை சந்தித்து நலம் விசாரித்து வருகிறார்கள். சினிமாவில் போட்டியிருக்கிறது தனிப்பட்ட வாழ்க்கையில் நாங்கள் எப்போது நண்பர்கள் தான் என்று சமீபத்தில் கமல் ஹாசன் கூறியிருந்தார்.

இப்படி இருக்கும் போது ஏன் விஜய், அஜித் நேரில் சந்திக்காமல் பல வருடங்கள் இருக்குறார்கள் என்ற கேள்வி தமிழ் சினிமாத்துறையில் இருந்து வருகிறது. மங்காத்தா படத்தின் போது இருவரும் சந்தித்தனர். அதற்கு பிறகு இருவரும் படப்பிடிப்பு ஒரே இடத்தில் இருந்தால் கூட அதை தவிர்த்துவிடுகிறார்கள்.

ஒரே படத்தில் தான் இருவரும் இணையமுடியவில்லை. எதாவது ஒரு விழாவில் கூடவா இருவரும் சந்திப்பதை ஒதுக்குகிறார்கள் என்று பலரின் கேள்வியாகவும் இருக்கிறது.

இதனால் சமீபத்தில் ரஜினி, கமல் இருவரும் சந்தித்து பேசிய புகைப்படம் இணையத்தில் வெளியாகியதை அவர்களின் ரசிகர்கள் இதைக்கூட உங்களால் செய்ய முடியாதா? என்று விஜய், அஜித் ரசிகர்களை கலாய்த்தும் வருகிறார்கள்.

Gallery