விஜய்யின் தவெக கட்சியில் இணைந்த பிரபல நடிகை!! யார் இவர்..
விஜய்யின் தவெக
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் பலரும் இணைந்து வருகிறார்கள். தற்போது தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பேத்தி மயூரி, வேலு நாச்சியார் குடும்ப உறுப்பினர், தலித் எழில்மலையின் மூன்றாவது மகள் கேத்ரின், அரங்க்நாதன் பேரன், எழுத்தாளரும் நடிகருமான வேலா ராமமூர்த்தியின் மகன், ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த ராஜ் மோகன் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர்.

இவர்களில் ஒருவராக பிரல நடிகையும் தவெகவில் இணைந்துள்ளார். துப்பறிவாளன், இரும்புத்திரை, அண்ணாத்த, டைரி, நட்பே துணை உள்ளிட்ட படங்களில் துணை நடிகையகா நடித்த ரஞ்சனா நாச்சியார் தான் இணைந்துள்ளார். சிறுசிறு ரோல்களில் நடித்த ரஞ்சனா, விஜய் டிவி புகழை வைத்து படம் ஒன்றினை தயாரித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
ரஞ்சனா நாச்சியார்
எதற்கும் துணிந்தவன், தலைவன் தலைவி போன்ற படங்களிலும் இவர் நடித்துள்ளார். இயக்குநர் பாலாவின் அண்ணன் மகளான ரஞ்சனா நாச்சியார், பாஜகவில் இணைந்து அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.

மாநில செயலாளராக இருந்த தன்னை பாஜகவில் மரியாதை கிடைக்கவில்லை என்று கூறி அக்கட்சியை விட்டு விலகி தற்போது தவெக கட்சியில் விஜய் முன்னிலையில் இணைந்துள்ளார். தவெக கட்சியில் இணைந்தப்பின் அவரது சமூகவலைத்தள பக்கத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.

அதில், என்னை தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைத்ததற்கு தலைவர் விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த பயணத்தில் உறுதுணையாக இருந்த பொதுச்செயலாளர் அண்ணன் ஆனந்த் அவர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள். இது இணைப்பு அல்ல, பெண்களின் குரல் அரசியலில் முழங்கும் தொடக்கம் என்று கூறியிருக்கிறார்.