அனிருத்தை பல வருடங்களுக்கு பின்னும் ஒதுக்கி வரும் ரஜினி மகள் ஐஸ்வர்யா.. அறிமுகப்படுத்தியதே அம்மணி தானே..
தமிழ் சினிமாவில் 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக தனுஷ் - ஐஸ்வர்யாவால் அறிமுகம் செய்யப்பட்டவர் அனிருத் ரவிச்சந்திரன்.
இதன்பின் பல வெற்றிப்படங்களை கொடுத்த அனிருத் கடந்த இரு ஆண்டுகளில் முன்னணி நடிகர், அஜித், விஜய், ரஜினி, கமல், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களில் பணியாற்றி ஹிட் கொடுத்து வந்தார்.
இதற்கிடையில் நடிகைகளுடன் நெருக்கமாக இருந்து சில காதல் சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். அனிருத்தை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்த ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்தை வைத்து லால் சலாம் என்ற படத்தினை இயக்கவுள்ளார்.
ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ள இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் பூஜையை சமீபத்தில் நடத்திய நிலையில் அனிருத் வேண்டாம் என்று ரஜினிகாந்தே முதலில் கூறியுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.