பப்ளிக்கில் பேண்ட்டை கழட்டினார்..செருப்பால் அடித்ததுபோல்!! ரஜினிகாந்த் குறித்து நடிகர் ஓபன் டாக்..

Rajinikanth Gossip Today Tamil Actors
By Jai Jun 14, 2026 02:04 PM GMT
Report

ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் சமீபத்தில் புதிய இயக்கம் ஒன்றை ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் பேசுபொருளாக மாறினார். இந்நிலையில் ரஜினிகாந்த் குறித்த பல விஷயங்கள் இணையத்தில் பரவி வருகிறது.

பப்ளிக்கில் பேண்ட்டை கழட்டினார்..செருப்பால் அடித்ததுபோல்!! ரஜினிகாந்த் குறித்து நடிகர் ஓபன் டாக்.. | Rajini Sir Was Changing Pant In Public Bose Venkat

சமீபத்தில் நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட், ரஜினிகாந்த் குறித்து ஒரு முக்கியமான விஷயத்தை பகிர்ந்துள்ளார். சிவாஜி படத்தில் அவருடன் நடித்தபோது நடந்த அந்த சம்பவத்தைதான் போஸ் வெங்கட் தெரிவித்துள்ளார்.

அதில், சிவாஜி படத்திற்காகத்தான், நான் வாய்ப்பு தேடி அலைந்தேன். படத்தில் நடித்தபோது ஒருமுறை காஸ்ட்யூம் மாற்றிக் கொள்ளுங்கள் என்று பொது இடத்தில் வைத்து கொடுத்தார்கள். உடை மாற்றிக் கொள்வதற்கு எந்த மறைவான இடமும் இல்லை.

பப்ளிக்கில் பேண்ட்டை கழட்டினார்..செருப்பால் அடித்ததுபோல்!! ரஜினிகாந்த் குறித்து நடிகர் ஓபன் டாக்.. | Rajini Sir Was Changing Pant In Public Bose Venkat

உடனே நான் அந்த காஸ்ட்டியூமரிடம், என்ன சார் நீங்கள் ஏதாவது மறைவாக ஒரு இடம் கொடுங்கள் என்று கேட்டேன். அதற்கு அவரோ, சார் சார் ஷாட் எடுக்குறாங்க சார் மாற்றிக் கொள்ளுங்கள் சார் என்று சொன்னார்.

பின் திரும்பி பார்த்தால் பப்ளிக்கில் ரஜினி சார் பேண்ட்-ஐ கழற்றி மாற்றிக் கொண்டிருந்தார். என்னை செருப்பால் அடித்தது போல் இருந்தது என்று போஸ் வெங்கட் தெரிவித்துள்ளார்.