ஹாலிவுட், பாலிவுட் காப்பி..ஆனாலும் படுதோல்வி!! ரஜினிக்கு சறுக்கலான படத்தின் விவரம்..

Rajinikanth Sridevi Ilayaraaja Gossip Today
By Jai Aug 27, 2026 10:30 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 80களில் நடித்த வெற்றி கமர்ஷியல் படங்களுக்கு பின் பஞ்சு அருணாசலம், எஸ்பி முத்துராமன் போன்றவர்கள் இருந்தார்கள். அப்படி பஞ்சு அருணாசலம் திரைக்கதையில் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் வெளியான படம் தான் அடுத்த வாரிசு.

ஹாலிவுட், பாலிவுட் காப்பி..ஆனாலும் படுதோல்வி!! ரஜினிக்கு சறுக்கலான படத்தின் விவரம்.. | Rajini Sridevi Starrer Adutha Varisu Failed Raaja

அடுத்த வாரிசு

ஆள்மாற்றம் மூலம் சொத்துக்களை அபரிக்க முயற்சிக்கும் கும்பல். அதற்குப்பின் நடக்கும் சமபவங்கள் தான் படம். ஹாலிவுட்டில் 1956ல் அனடாசியா என்ற படத்தின் தழுவல் தான் இப்படம். இதே படம் பாலிவுட்டில் ராஜா ஜானி என்ற பெயரில் 1972ல் வெளியானது. அதை வைத்துதான் ரஜினியின் 'அடுத்த வாரிசு' படம் உருவானது.

ஹாலிவுட், பாலிவுட் காப்பி..ஆனாலும் படுதோல்வி!! ரஜினிக்கு சறுக்கலான படத்தின் விவரம்.. | Rajini Sridevi Starrer Adutha Varisu Failed Raaja

படத்தில் கண்ணனாக ரஜினியும், வள்ளி மற்றும் ராதா ரோலில் ஸ்ரீதேவி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வெளியானது. இளையராஜா இசையில் பஞ்சு அருணாசலம் எழுதிய ஆசை நூறுவகை, பேசக்கூடாது என இரு பாடல்களும் மெகா ஹிட்டானது.

ஹாலிவுட், பாலிவுட் காப்பி..ஆனாலும் படுதோல்வி!! ரஜினிக்கு சறுக்கலான படத்தின் விவரம்.. | Rajini Sridevi Starrer Adutha Varisu Failed Raaja]

ரஜினியின் ஸ்டைல், ஸ்ரீதேவியின் நடிப்பு, செந்தாமரையின் வில்லத்தனம் என அனைத்தும் இருந்தும் ஜமீன், அரண்மனை, புதையல் என்ற செட்டப், நிகழ்காலத்திற்கு ஒட்டாமல் படத்திற்கு அந்நியத்தன்மையை கொடுத்ததால் அடுத்த வாரிசு படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை. ரஜினியின் ஆரம்பகால சுமார் படங்களில் அடுத்த வாரிசு ஒன்றாக திகழ்ந்தது.