போற போக்க பாத்த நம்மலையும் இந்த லிஸ்ட்ல இழுப்பானோ! சூப்பர் ஸ்டார் ரஜினியை புலம்பவிட்ட இயக்குனர்கள்..
தென்னிந்திய சினிமாவில் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட படங்களான பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப் 2 படங்கள் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் வெளியாகியது. 13 ஆம் தேதி வெளியான நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் படுமோசமான விமர்சனங்களை பெற்று தோல்வியடைந்துள்ளது.
முதல் நாள் வசூலாக 40 கோடியை கடந்தாலும் தற்போது வரை 80 கோடியை மட்டுமே எட்டியுள்ளது. மேலும் 14 ஆம் தேதி நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகிய கேஜிஎஃப் 2 படம் பிரமமாண்ட அளவில் இருப்பதாகவும் மிகப்பெரியளவில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் இவ்விரு படத்தினையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து கருத்துக்களை கூறியிருக்கிறார். கேஜிஎஃப் 2 படத்தினை பார்த்துவிட்டு சூப்பர்ஸ்டார் அப்படத்தின் இயக்குனருக்கு கால் செய்து பாராட்டினை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சன் பிச்சர்ஸ் நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சென்று பீஸ்ட் படத்தினை பார்த்துள்ளார் ரஜினிகாந்த். படத்தினை பார்த்து சில நிமிடம் அமைதியாக இருந்தாராம்.
பீஸ்ட் படத்தின் தோல்வியால் நெல்சனை பற்றி எந்த முடிவாக இருந்தாலும் சன் பிச்சர்ஸ் ரஜினிகாந்திடமே கொடுத்துள்ளார்களாம். தலைவர் 169க்கு அப்போ நெல்சனா அல்லது அட்லீயா?..