சங்கர் சிறுத்தை சிவா எல்லாம் ஓரமா போங்க! டாக்டர் இயக்குனரை வளைத்த சூப்பர்ஸ்டார்

nelson anirudh superstar rajinikanth sunpictures beast thalaivar169
By Edward Feb 08, 2022 04:55 AM GMT
Report

தமிழில் நடிகை நயன் தாரா நடிப்பில் வெளியாகிய படம் கோலமாவு கோகிலா. காமெடி படத்தினை இப்படியும் எடுக்க முடியும் என்ற கோணத்தில் இயக்குனர் நெல்சன் இப்படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானார்.

அப்படத்தினை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தினை எடுத்து 100 கோடி வசூல் கொடுத்திருந்தார். படம் வெளியாவதற்கு முன்பே நடிகர் விஜய் நெல்சனை கமிட்டாகி பீஸ்ட் படத்தில் நடித்தை முடித்தார். அப்படத்தின் முழுவேலைகள் நிறைவடைந்து வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியாகவுள்ளது என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில் லேடிசூப்பர் ஸ்டார், சிவகார்த்திகேயன், விஜய் என லிஸ்ட்டில் இருந்த நெல்சன் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்தின் 169வது படமாக இருக்கும் இப்படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்க நெல்சன் இயக்க அனிரூத் இசை என்றும் கூறப்படுகிறது. அதற்காக ரஜினியை நேரில் சென்று நெல்சன் சந்தித்த புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

Gallery