பையன் வேணும்னு மகனை தத்து கேட்டாரு ரஜினிகாந்த்!! பிரபல நடிகை ஓபன் டாக்..
சாந்தி வில்லியம்ஸ்
80-களில் டாப் நடிகையாக திகழ்ந்து தற்போது சீரியல்களிலும் படங்களிலும் குணச்சித்திர ரோலில் நடித்து வருபவர் தான் நடிகை சாந்தி. ஒளிப்பதிவாளர் வில்லியம்ஸை காதலித்து திருமணம் செய்து 4 குழந்தைகளை பெற்றார் சாந்தி.

கணவர் மறைவுக்கு பின் 4 குழந்தைகளுடன் பல கஷ்டங்களை அனுபவித்தேன் என்று பேட்டியொன்றில் பகிந்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், என் கணவருக்கு என் மேல் பாசம்னாலே என்னன்னு காட்டத்தெரியாது. ஆனால் என் பையன் மீது ரொம்ப பாசமா இருந்தார்.

தத்து கேட்ட ரஜினி
ஒருமுறை ஷூட்டிங்கின் போது என் மகனை கூட்டிச்சென்றார். அப்போது என் கணவரிடம் ரஜினி சார், உனக்கு தான் 4 பசங்க இருக்காங்கல்ல, எனக்கு ஆம்பள பசங்க இல்ல, எனக்கு தத்து கொடுத்துடுன்னு கேட்டார்.
ஆனால் கோடி ரூபாய் கொடுத்தாலும் பையன தத்து கொடுக்க மாட்டேன்னு கணவர் சொல்லிட்டு வந்துட்டார் என்று சாந்தி வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.