நடிகையின் விருப்பமில்லாமல் அவரை காதலித்து, பிரபல நடிகரிடம் செமையாக அடிவாங்கிய ரஜினிகாந்த்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் லதா என்பவர் கடந்த 1981ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஆனால், திருமணத்திற்கு முன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக 70களில் வலம் வந்த நடிகை லதாவை காதலித்துள்ளாராம் நடிகர் ரஜினி.
அவருடைய விருப்பம் இல்லாமல் அவரிடம் தன்னுடைய காதலை ஏற்றுக்கொள்ளும்படியும் கேட்டுள்ளாராம். அதை நடிகை லதா மறுத்துள்ளார். இந்த விஷயத்தை தெரிந்துகொண்ட நடிகர் எம்.ஜி.ஆர், தனது ராமாவரம் தோட்டத்திற்கு ரஜினிகாந்தை அழைத்து வந்து, அடித்துள்ளார் என்று திரை வட்டாரத்தில் ஒரு செய்தி உள்ளது.
ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை என்றும், ரஜினியை கூப்பிட்டு வந்து எம்.ஜி.ஆர் அடிக்கவில்லை என்றும் நடிகை லதா பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். லதா மட்டுமின்றி எம்.ஜி.ஆருடன் 40 ஆண்டுகள் நெருக்கனாக பழகிய கே.பி. ராமகிருஷ்ணன் அவர்களும், இந்த விஷயம் குறித்து பேசும் பொழுது, ரஜினியை ராமாவரம் தோட்டத்தில் வைத்து எம்.ஜி.ஆர் அடிக்கவில்லை.
அன்று எம்.ஜி.ஆர் அவர்களை நேரில் சந்திக்க தான், ரஜினி வந்திருந்தார். அவர்கள் இருவரும் ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். இது தான் அங்கு நடந்தது.. என உண்மையை வெளிப்படையாக அவர் தெரிவித்துள்ளார்.