எப்படி இருந்த மனுஷன இப்படி ஆக்கிட்டீங்களே! அண்ணாத்த வசூல் கம்மியா?

salary superstar annaatthe rajinikanth sunpictures
By Edward Nov 18, 2021 04:10 PM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் முன்னணி நட்சத்திரங்கள் உடன் நடித்து வெளியான படம் அண்ணாத்த. பல எதிர்ப்பார்ப்புகளோடு வெளியான படம் தற்போது 150 கோடி வசூலை பெறப்போகிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அண்ணாத்த படத்தில் இருந்து சன் பிச்சர்ஸ் நிறுவனத்திற்கு தமிழகத்தில் மட்டும் 90 கோடி வசூல் செய்துள்ளது. அதில் 75 சதவீதம் ஷேர் அந்நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது. இருந்தாலும் படத்தில் வசூல் குறைவு என்பதால் படத்தில் பணி செய்தி முக்கிய நடிகர்கள் பணியாளர்கள் என அவர்களுக்கான சம்பளத்தை குறைத்துள்ளதாக பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.

மேலும் இப்படத்தின் தோல்வியை அறிந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய ஒரு படத்தின் சம்பளம் 100 கோடியை தற்போது 70 கோடியாக குறைத்துள்ளார். 30 கோடியளவில் குறைத்து கொண்டாலும் சூப்பர் ஸ்டாரின் பிரமாண்ட என்றும் குறையாது என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

அடுத்த படத்தில் இந்த சம்பளம் தான் வாங்கவுள்ளார் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.