மகளுக்காக அப்படியொரு தியாகம் செய்த ரஜினி!.. உண்மையை சொன்ன பிரபலம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி தெரியாத இந்தியாவில் ஆளே இருக்க முடியாது, அந்த அளவிற்கு அவர் பிரபலம். இவர் நடிப்பில் தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் சரியாக போகவில்லை.
இதனால் ரஜினிகாந்த் சில ட்ரோல்களையும் எதிர்கொண்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் அமைந்து இருந்தது. இப்படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து கோலிவுட்டில் சாதனையை நிகழ்த்தியது.
இதைத்தொடர்ந்து ரஜினிகாந்த் இயக்குனர் tj ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
நனைந்த படி நீச்சல் குளத்தில் அந்த உடையில் புகைப்படம் வெளியிட்ட தனுஷ் பட நடிகை.. இணையத்தை கலக்கும் பதிவு
இந்நிலையில் இப்படத்திற்காக ரஜினிகாந்த் ரூ 90 கோடி சம்பளம் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது, இதற்கு முந்தைய படங்களில் ரஜினிகாந்த் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வந்த நிலையில் இப்படத்திற்கு சம்பளத்தை குறைத்துள்ளார்.
இதற்கு காரணம், tj ஞானவேல் ரஜினி கூட்டணியில் உருவாகும் படத்தையும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் படத்தையம் லைக்கா நிறுவனம் தான் தயாரிக்கிறது. மகளுக்காக தான் ரஜினிகாந்த் சம்பளத்தை குறைந்து கொண்டார் என்று சினிமா பத்திரிகையாளர் கூறியுள்ளார்.