ஸ்ரீதேவி உடன் திருமணம்?.. கைகூடாமல் போன ரஜினியின் முதல் காதல்!
ஸ்ரீதேவி
இந்திய சினிமா கொண்டாடிய பிரபலமான நாயகிகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ் சினிமா ரசிகர்களால் என்றும் மறக்கவே முடியாத நாயகியாக வலம் வந்த இவர் சில வருடங்களுக்கு முன் துபாயில் உறவினர் திருமணத்திற்கு சென்றவர் அங்கு உயிரிழந்தார்.
அனைத்து நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அவர்களில் ரஜினிகாந்துடன் ஸ்ரீதேவியின் ஆன்-ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி மிகவும் அற்புதமாக இருக்கும்.
திருமணம்?
ஸ்ரீதேவியும் ரஜினிகாந்தும் முதன்முதலாக 1976ல் கே. பாலச்சந்தர் இயக்கிய 'மூன்று முடிச்சு' படத்தில் இணைந்து நடித்தனர். அதன் பின், தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளனர்.
அடுத்தடுத்த ஆண்டுகளில் அவர்களின் உறவு நெருக்கமானது. ரஜினிகாந்த் ஸ்ரீதேவி மீது காதல் கொண்டார். அதனால் அவரை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு ஸ்ரீதேவியின் வீட்டிற்குச் சென்றார்.
அங்கு திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் கெட்ட சகுனமாகக் கருதி தன் காதலை சொல்லாமல் வெளியேறினார். இந்த காதல் கதை குறித்து கே. பாலச்சந்தர் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.