தன் தங்கச்சியை கண்டுகொள்ளாமல் கழட்டிவிட்ட ரஜினிகாந்த்.. புலம்பும் கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள்..

Rajinikanth Udhayanidhi Stalin Keerthy Suresh Mari Selvaraj Maamannan
By Edward Jul 07, 2023 11:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது தேசிய விருது நடிகையாக புகழ்பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அவர் நடித்த பாதி படங்கள் படுதோல்வியை அளித்ததோடு ராசியில்லா நடிகை என்ற பெயரையும் எடுத்தார்.

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் படத்தில் தங்கையாகவும் நடித்து மொக்கை வாங்கினார் கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். படம் கலவையான விமர்சனத்தை பெற்று வந்த நிலையிலும் பிரபலங்கள் வாழ்த்தும் பாராட்டியும் வருகிறார்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எந்த படம் பார்த்து நன்றாக இருக்கிறதோ, அப்படக்குழுவினருக்கு கால் செய்து பாராட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார். அப்படித்தான் மாமன்னன் படத்தை பார்த்து இணையத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.

அதில், சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள் என்றும் பதிவிட்டுள்ளார்.

ஆனால் இந்த வாழ்த்தில், நடிகை கீர்த்தி சுரேஷை மறந்து அவரின் பெயரை குறிப்பிடாமல் இருந்துள்ளார். இதனை நெட்டிசன்கள் நானும் படத்தில் நடிச்சிருக்கேன் என்று கலாய்த்து வருகிறார்கள். கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் ஏற்கனவே படத்தில் பெரிய ஸ்கோப் இல்லை என்று வெறுப்பில் இருந்த நிலையில் இந்த விசயத்தால் கடும் கோபத்தில் இருந்து வருகிறார்கள்.