ஒரு நியாயம் வேண்டாமா ஜி? சூப்பர் ஸ்டாரின் மாஸ் படத்தை நாசப்படுத்திய ஹீரோ
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகர் ரஜினிகாந்த் இதுவரை 168 படங்களை நடித்து முடித்திருக்கிறார். இதில் சில படங்கள் தோல்வியை தழுவி இருந்தாலும் பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாக அமைந்தது. அந்தவரிசையில் டாப் 10ல் இருக்கும் படம் பாட்ஷா. ரஜினி, நக்மா நடிப்பில் வெளியான இப்படம் ஹிந்தியில் பிக் பிரதர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
தமிழில் மிகப்பெரியளவில் பேசப்பட்ட்ட இப்படத்தினை, சன்னி தியோல், பிரியங்கா சோப்ரா நடித்திருப்பார்கள். தமிழ் சினிமா வரலாற்றில் இன்றும் ஒரு பொக்கிஷ திரைப்படமாக இருக்கும் பாட்ஷா ஹிந்தியில் படுமோசமாக தோல்வி அடைந்தது.
அந்தப் படத்தில் சன்னி தியோல் ரிக்ஷா ஓட்டுபவராக நடித்திருப்பார். மிகப் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட அந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியது. ஒரு நல்ல படத்தை சொதப்பி விட்டீர்கள் என்று அப்போது பல பத்திரிகைகள் விமர்சனம் செய்யப்பட்டது.
ரஜினிகாந்தின் வரலாற்றில் இந்தியளவில் என்ன உலகளவில் பெரியதாக பேசப்பட்ட படத்தை இப்படி கெடுத்து விட்டீர்களே என்று ரசிகர்களும் பிரபலங்களும் அப்போதே கதறி வந்தனர்.