குடிப்பழக்கத்தால் சூனியம் வைத்துக்கொண்ட ரஜினிகாந்த்!! மேடையில் உண்மையை கூறிய சூப்பர் ஸ்டார்..
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தின் ஷூட்டிங்கை முடித்து ரிலீஸ்காக காத்துக்கொண்டிருக்கிறார். இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்ச் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், குடிப்பழக்கம் மட்டும் என்னிடம் இல்லாமல் இருந்திருந்தால், இப்போது இருப்பதை விட எங்கே உயரத்தில் இருந்திருப்பேன் என்றும் குடிப்பழக்கம் எனக்கு நானே வைத்துக்கொண்ட சூனியம்.
தயவு செய்து குடிப்பழக்கத்தை விட்டுவிடுங்கள். நீங்க குடிக்கிறதால அம்மா, பொண்டாட்டினு குடும்பத்துல இருக்குற எல்லோருடைய வாழ்க்கையும் பாதிக்கப்படுது என்று சூப்பர் ஸ்டார் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் இன்னும் 10 வருடம் கழித்து சொல்லுங்க என்று கலாய்த்து வருகிறார்கள். ஏற்கனவே ஒரு முறை ரஜினி ஆண்டு ஒரு படத்திற்காக ஹைதராபாத் ஷூட்டிங் சென்றுள்ளார். அங்கு ஷூட்டிங் முடித்தவுடன் விமான நிலையத்திற்கு குடிபோதையில் சென்று இருக்கிறார்.
அப்போது அவர் நண்பரிடம் தகாத வார்த்தையால் பேசியுள்ளார். இதனால் இருவருக்குமே இடையே சண்டை நடந்துள்ளது. இதையடுத்து விமான அதிகாரிகள் இருவரையும் சமாதானப் படுத்த முயன்றார்கள் ஆனால் ரஜினி மோசமாக சண்டை போட்டாராம்.
அவரை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணாடி அறையில் இருக்க வைத்தார்களாம்.
ரஜினி கண்ணாடியை உடைத்து விட்டு அட்டகாசம் செய்தாராம். கடைசியில் ஹைதராபாத் போலீசார் அவரை கைது செய்தனர் என்று ஒரு ரசிகர் அந்த செய்தியை பகிர்ந்திருந்தார்.
