வாய்ப்பு கேட்ட மீனா!! நீ எல்லாம் செட்டாக மாட்டன்னு கூறிய சூப்பர் ஸ்டார்..

Rajinikanth Meena K. S. Ravikumar
By Edward Apr 12, 2023 09:02 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகையாகவும் 90ஸ் காலக்கட்டத்தில் திகழ்ந்து வந்தவர் நடிகை மீனா. சமீபத்தில் சினிமாவில் அறிமுகமாகி 40 ஆண்டுகளை கடந்திருந்தார். அதற்காக தனியார் இணையதளம் மூலம் மீனாவிற்கு நிகழ்ச்சி ஒன்று நடந்தது.

அந்நிகழ்ச்சிக்கு முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு பாராட்டி வந்தனர். நிகழ்ச்சிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக வந்து மேடையில் மீனா பற்றியும் பேசியிருக்கிறார்.

பல விசயங்களை பகிர்ந்து கொண்ட ரஜினிகாந்த், படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் நான் தான் நடிப்பேன் என்று ஒற்றைக்காலில் நின்று ரஜினிகாந்தை டார்ச்சர் செய்திருக்கிறார்.

ரஜினிகாந்த் கூறுகையில், நீலாம்பரியாக மீனா என்னிடம் நடிக்க கேட்டார், ஆனால் அந்த கேரக்டர் உனக்கு செட்டாகாது, வேண்டும் என்றால் செளந்தர்யா கதாபாத்திரத்தில் நடிக்கலாமே என்று கூறினேன். ஆனால் மீனா அந்த கேரக்டர் தான் வேண்டும் என்று டார்ச்சர் செய்தார்.

இயக்குனர் இதற்கு ஒற்றுக்கொள்ள மாட்டார், உனக்கு செட்டாகாது என்று ரிஜெக்ட் செய்தேன். அதுமுதல் அந்த விசயத்திற்காக மீனா இன்னும் என் மீது கோபமாக இருக்கிறார் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

Gallery