மூன்று ரவுண்ட் மது அருந்தினேன்.. கமலால் கடுப்பான நடிகர் ரஜினிகாந்த்!

Kamal Haasan Rajinikanth Tamil Cinema
By Bhavya Jul 08, 2025 01:30 PM GMT
Report

நாயகன்

தமிழ் சினிமாவின் கல்ட் திரைப்படங்களில் ஒன்று நாயகன். உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் மணி ரத்னம் இயக்கத்தில் உருவான இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவான இப்படம், மும்பையை சேர்ந்த வரதராஜன் முதலியார் என்ற உண்மையான கேங்ஸ்டர் வாழ்க்கையை மையாக வைத்து எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

மூன்று ரவுண்ட் மது அருந்தினேன்.. கமலால் கடுப்பான நடிகர் ரஜினிகாந்த்! | Rajinikanth Open Talk About Kamal Movie

மூன்று ரவுண்ட்

இந்நிலையில், ரஜினிகாந்த் இப்படத்தை பார்த்து என்ன செய்தார் என்பது குறித்து இயக்குநர் பி.வாசு முன்பு பேட்டி ஒன்றில் பகிர்ந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், " நாயகன் போன்ற ஒரு திரைப்படத்தில் நீங்கள் இன்னும் நடிக்கவில்லை என்று நடிகர் ரஜினிகாந்திடம் சொன்னேன் அதற்கு அவர் ஒரு சம்பவத்தை பகிர்ந்தார்.

அதாவது, அப்படத்தை பார்த்து விட்டு வந்து மூன்று ரவுண்ட் மது அருந்தினேன். உடனடியாக கமல்ஹாசனுக்கு போன் செய்து நான் அருந்திய மதுவை விட, வேலு நாயக்கரின் போதை அதிகமாக இருக்கிறது என்று கமல்ஹாசனிடம் கூறியதாக தெரிவித்தார்" என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார். 

மூன்று ரவுண்ட் மது அருந்தினேன்.. கமலால் கடுப்பான நடிகர் ரஜினிகாந்த்! | Rajinikanth Open Talk About Kamal Movie