முட்டாள்தனத்தை பாராட்டிய ரஜினி..வெளுத்து வாங்கிய பிரபல இயக்குநர்...
சட்டமன்றத் தேர்தல் 2026
தமிழகத்தின் 2026 ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தல் களம் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், அரசியல் தலைவர்கள் மேடைகளில் பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த தேர்தலில் முதன்முறையாக களமிறங்கும் தமிழக வெற்றிக் கழகத்தை சுற்றி கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஆதவ் அர்ஜுனா கடந்த வாரம் ரஜினிகாந்த் பற்றி பேசியது கடும் கண்டத்திற்குள்ளாகியது.

அரசியலுக்கு வர பயந்தவர் ரஜினி என்று பேசியதை பலரும் விமர்சித்த நிலையில் இதற்கு ரஜினியும் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்தார். அப்படி ரஜினிக்கு ஆதரவாகவும் பாராட்டியும் இருந்த நெட்டிசன்கள் தற்போது அவருக்கு எதிராக திரும்பியுள்ளனர்.
துரந்தர் 2
அதற்கு காரணம் பாலிவுட்டில் வெளியான துரந்தர் 2 படம் தான். அப்படத்தை பார்த்துவிட்டு ரஜினி, பாராட்டி ஒரு பதிவினை பகிர்ந்திருக்கிறார். என்ன மாதிரியான ஒரு படம் துரந்தர். ஆதித்யத் தார் மற்றும் ரன்விங் சிங் உள்ளிட்ட படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள். இந்தியர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம். ஜெய்ஹிந்த்! என குறிப்பிட்டிருந்தார் ரஜினி. இதுகுறித்து நெட்டிசன்கள் கடுமையாக ரஜினியை விமர்சித்து வந்தனர்.

அந்தவகையில் பிரபல இயக்குநர் லெனின் பாரதி, ரஜினிகாந்தின் இந்த பதிவிற்கு கடுமையான கட்டனத்தை தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், இரவோடு இரவாக மக்களை அல்லல் படவைத்து எத்தனையோ இன்னல்களை தந்த நரேந்ந்திர மோடியின் டிமானிடைசேஷன் எனும் முட்டாள்தனத்தை பாராட்டிய ’சங்கி’ ரஜினிகாந்த் அவர்கள் இந்தப்படத்தை பாராட்டுவது ஒன்றும் அதிசயமில்லை என்று கூறி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் இயக்குநர் லெனின் பாரதி. இதற்கு பலரும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
இரவோடு இரவாக மக்களை அல்லல் படவைத்து எத்தனையோ இன்னல்களை தந்த @narendramodi யின் #Demonetisation எனும் முட்டாள்தனத்தை பாராட்டிய #சங்கி @rajinikanth அவர்கள் இந்தப்படத்தை பாரட்டுவது ஒன்றும் அதிசயமில்லை.. #Dhurandhar2 https://t.co/KjjywnOEbp
— leninbharathi (@leninbharathi1) March 23, 2026