விஜய் முதலமைச்சர் ஆனதால் எனக்கு பொறாமை இல்லை..ரஜினிகாந்த் ஓபன் டாக்..

Rajinikanth Vijay C Joseph Vijay
By Jai May 17, 2026 05:45 AM GMT
Report

விஜய் முதலமைச்சர்

தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் கடந்த மே 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பதவி ஏற்றார். முதலமைச்சரானதற்கு சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பதவி ஏற்றதற்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை.

இதனையடுத்து, ரஜினிகாந்த் விமான நிலையத்திற்கு சென்றபோது, விஜய் முதலமைச்சரானது குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரஜினிகாந்த் கைக்கூப்பிப்பி சிரித்தபடி சென்றார்.

விஜய் முதலமைச்சர் ஆனதால் எனக்கு பொறாமை இல்லை..ரஜினிகாந்த் ஓபன் டாக்.. | Rajinikanth Press Meet Vijay Cm Wishes Controversy

இதனை பலரும் விமர்சித்த நிலையில், இன்று மே 17 ஆம் தேதி காலை போயஸ் கார்டனில் இருக்கும் தன்னுடைய வீட்டில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பல விளக்கங்களை கொடுத்துள்ளார்.

ரஜினிகாந்த்

அதில், தேர்தல் முடிவுகள் வந்தபோது என்னைப்பற்றி 2, 3 விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் அரசல் புரசலாக பேசப்பட்டு வந்தது. அதுபற்றி பேசவில்லை என்றால் அது உண்மையாகிவிடும். சில நாட்களுக்கு முன் பெங்களூருக்கு சென்றபோது, அங்கே நீங்கள் இருப்பீர்கள், அதற்கு விடை கொடுத்துவிடலாம் என்று நினைத்தேன், ஆனால் நீங்கள் இல்லை. அதன்பின் பெங்களூருவில் இருந்து இங்கு வரும்போது கூட நீங்கள் இல்லை.

தேர்தல் முடிவு வந்தவுடன், ஸ்டாலின் சாரை பார்த்தேன், என்னுடைய 40 ஆண்டு நண்பர், கொளத்தூரில் அவர் தோற்றது எனக்கு வருத்தமாக இருந்தது, நட்பு என்ற முறையில் அவரை சந்தித்தேன். அதற்கு சிலர், விஜய் முதலமைச்சர் ஆகக்கூடாது, அதற்கு தடுக்க போயிருக்காங்க, ரெண்டு கட்சியை சேர்க்க திட்டம் போடுறாரு என்று பேசுறாங்க என்று விமர்சனம் வருகிறது. அப்படி பேசுகிற ஆள் ரஜினிகாந்த் கிடையாது.

விஜய் முதலமைச்சர் ஆனதால் எனக்கு பொறாமை இல்லை..ரஜினிகாந்த் ஓபன் டாக்.. | Rajinikanth Press Meet Vijay Cm Wishes Controversy

இரண்டாவது விஜய்க்கு வாழ்த்து சொல்லவில்லை, அவர் ஜெயித்தவுடன் எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்தேன். நான் ஏர்போர்ட்டுக்கு போகும்போது, ஒருவர் மீடியா ஆள் போல் தெரியவில்லை, வெறும் போன் வைத்துக்கொண்டு விஜய் முதலமைச்சர் ஆகிவிட்டார் என்று கேட்டார், நான் சிரித்துக்கொண்டு போய்விட்டேன். அதுக்கு விஜய்க்கு வாழ்த்து சொல்லல, விஜய் மீது எனக்கு பொறாமை.

அரசியலில் நான் இல்லை, அப்படி இல்லாமல் இருக்கும்போது அவர் மீது எனக்கு என்ன பொறாமை. ஒருவேளை, கமல் ஹாசன் முதலமைச்சராகி இருந்தால் பொறாமை வந்து இருக்குமோனு தெரியாது, வந்திருக்காது. கிடைக்கிறது கிடைக்காமல் இருக்காது, கிடைக்காமல் இருக்கிறது கிடைக்காது என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார் ரஜினிகாந்த்.

60 வருட திராவிட அரசியலை பின்னுக்கு தள்ளி மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறார் விஜய். MGR - NTR ஐ விட பெரிய சாதனை செய்திருக்கிறார் விஜய். த.வெ.க தொண்டர்கள் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும்.. அவர்கள் செய்யும் சிறு தவறு கூட விஜயை பாதிக்கும், விஜய்க்கு இரண்டு ஆண்டுகள் அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.