அடிவாங்கும் காட்சிக்கு நோ.. சூப்பர் ஹிட் படத்தை ரிஜெக்ட் செய்த ரஜினி
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதல் முறையாக ரஜினிகாந்த் நடித்து வெளிவர உள்ள திரைப்படம் கூலி.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகர்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், சோப்பின் சபீர், உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
என்ன படம்?
இந்நிலையில், பாபநாசம் படத்தில் நடிக்க ரஜினிகாந்த் நிராகரித்தது ஏன் என்பது குறித்து தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பகிர்ந்துள்ளார்.
அதில், " பாபநாசம் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜியிடம், ரஜினியை வைத்து இந்த படத்தை பண்ணலாம் என ஐடியா கொடுத்தது நான் தான். அதன் பின், ரஜினியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
படத்தை பார்த்த ரஜினிகாந்துக்கு படம் மிகவும் பிடித்துப் போனாலும் நடிக்க மறுத்துவிட்டார். அதற்கு காரணம் பாபநாசம் படத்தில் போலீசிடம் அடிவாங்கும் காட்சி இருக்கும். அது போன்று நான் அடிவாங்கும் காட்சியை என் ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள். என்று கூறி மறுத்துவிட்டார்" என்று தெரிவித்துள்ளார்.