சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதல் படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

Rajinikanth
By Kathick Jun 02, 2025 04:30 AM GMT
Report

உலகளவில் ரசிகர்களால் சூப்பர்ஸ்டார் என கொண்டாடப்படுபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர்களில் ஒருவராக உள்ளார்.

கூலி படத்திற்காக ரூ. 150 கோடி சம்பளம் பெற்றுள்ளார் என கூறப்படுகிறது. மேலும் தனது அடுத்த படத்திற்காக ரூ. 280 கோடி வரை சம்பளம் வாங்கவுள்ளார் என சமீபத்தில் தகவல் ஒன்று வெளிவந்தது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதல் படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Rajinikanth Salary For His First Lead Role

இந்திய சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் ரஜினிகாந்த், தான் முதன் முதலில் ஹீரோவாக நடித்த அபூர்வ ராகங்கள் படத்திற்காக வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

கே. பாலசந்தர் இயக்கத்தில் 1975ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அபூர்வ ராகங்கள். இப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்த ரஜினிகாந்த் ரூ. 5 ஆயிரம் அட்வான்ஸ் முதலில் பெற்றதோடு, ரூ. 50 ஆயிரம் சமபலமாக பெற்றிருக்கிறார் என கூறப்படுகிறது.