மாறுவேடத்தில் சென்ற ரஜினிகாந்த்!! ரூ. 10 பிச்சை போட்ட பெண்ணுக்கு ஷாக் கொடுத்த சூப்பர் ஸ்டார்..

Rajinikanth Actors Tamil Actors
By Edward Jul 09, 2025 02:30 AM GMT
Report

ரூ. 10 பிச்சை போட்ட பெண்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக திகழ்ந்து வருகிறார். ரியல் வாழ்க்கையில் சாதாரண தோற்றத்தில் காணப்படும் ரஜினிகாந்த், பெங்களூருவில் மாறுவேடத்தில் சென்ற அனுபவம் பற்றிய ஒரு தகவலை பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

அதில், ஒருமுறை மாறுவேடத்தில் பெங்களூருவில் இருக்கும் ஒரு கோயிலுக்கு சென்றேன். அப்போது ஒரு பெண் சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தார். என்னை பார்த்ததும் யாசகம் பெறுபவர் என்று நினைத்த அப்பெண் என்னிடம் உடனடியாக பத்து ரூபாயை தர்மமாக கொடுத்தார். பதிலுக்கு எதுவும் கூறாமல், நான் அதை பெற்றுக்கொண்டேன்.

மாறுவேடத்தில் சென்ற ரஜினிகாந்த்!! ரூ. 10 பிச்சை போட்ட பெண்ணுக்கு ஷாக் கொடுத்த சூப்பர் ஸ்டார்.. | Rajinikanth Shared Hilarious Incident At Temple

சூப்பர் ஸ்டார்

சிறிது நேரம் கழித்து என்னிடம் இருந்த 200 ரூபாயை கோயில் உண்டியலில் போட்டேன். இதனை பார்த்த அப்பெண்ணுக்கு எதுவும் புரியவில்லை. சில நிமிடங்களுக்கு அப்படியே அமர்ந்து யோசிக்கத்துவங்கினார்.

கோயிலில் இருந்து நான் புறப்பட்டபோது என்னை பின் தொடர்ந்து அப்பெணும் வந்தார். நான் காரில் ஏறியப்பின், என் தலையில் சுற்றி கட்டியிருந்த துணியை அகற்றிவிட்டேன். அப்போது நான் யாரென்று அப்பெண்ணுக்கு தெரிந்து அதிர்ச்சியடைந்த நிலையில், நானும் காரில் சென்றுவிட்டேன் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.