ஜெயலலிதாவை பகைத்த ரஜினி!! தாக்கிய அதிமுகவினரிடம் இருந்து காப்பாற்றிய பிரபல இயக்குநர்..
ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் இப்படத்தினை முடித்துவிட்டு கமல் ஹாசன் தயாரிப்பில் தன்னுடைய 173வது படத்தில் நடிக்கவுள்ளார்.

பாகியராஜின் 50
இந்நிலையில், இயக்குநர் பாகியராஜின் 50 வருட சினிமா பயணத்தை முன்னிட்டு அவருக்கு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு செவாலியே விருது அளிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.
அப்போது நான் பேசிய போது மிகவும் ஆவேசமாக ஜெயலலிதாவை விமர்சித்து பேசினேன். ஆனால் எனக்கு அது பெரிதாக தெரியவில்லை. ஏன் இப்படி பேசினீர்கள் என்று ஸ்ரீதேவி அதன்பின் என்னிடம் கேட்டார்.
நடிகர்களை திறந்தவெளி வேனில் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டபோது, விஜயகுமார் என்னை வரவேண்டாம் என்று கூறியும் நான் போகிறேன் என்று சென்றேன்.

அப்போது அதிமிக தொண்டர்கள் என்மீது கோபத்தில் கல் எல்லாம் எறிந்தார்கள். நான் எப்படி வெளியேறுவேன் என்று தெரியாமல் இருந்தேன். சில என்னை இந்த பக்கம் போகனும் சார் என்று அழைத்துச் செல்கிறார்கள், சிலர் இந்த பக்கம் போகனும் என்று அழைத்துச் செல்கிறார்கள். என்னை அடிக்கிறார்கள், கிள்ளுகிறார்கள் என்று நன்றாக தெரிந்தது. அங்கிருந்து என்னை காப்பாற்றி மீட்டது பாக்யராஜ் தான் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார் ரஜினிகாந்த்.