மகளே கிடையாது என்று ஒதுக்கிய ராஜ்கிரண்.. ரகசிய திருமணம் செய்து வைத்த பிரபல தொலைக்காட்சி..

Rajkiran Zee Tamil Gossip Today
By Edward Oct 04, 2022 01:10 PM GMT
Report

நடிகர் ராஜ்கிரணின் மகள் குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி ஒரு சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்டார் என செய்தி சில மாதங்களாக வைரல் ஆகி கொண்டிருக்கிறது.

கோபத்தில் ராஜ்கிரண்

அவர் என் மகள் இல்லை, வளர்ப்பு மகள் தான் என ராஜ்கிரண் விளக்கம் அளித்து இருக்கிறார். மேலும் அவரை காதல் திருமணம் செய்த சீரியல் நடிகர் பணம் பறிக்கும் நோக்கத்தில் தான் இதை செய்திருக்கிறார் எனவும் ராஜ்கிரண் குற்றம்சாட்டி இருந்தார்.

முகநூல் மூலம் அவருடன் நட்பு ஏற்படுத்திக்கொண்ட சீரியல் நடிகர், என்னென்ன முறையிலோ அந்தப்பெண்ணை, தன் வசப்படுத்தி, கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்.

இந்த விசயம் என் காதுக்கு வந்ததும், அந்த நடிகரைப்பற்றி நான் விசாரிக்க ஆரம்பித்ததில், அவர் மகா மட்டரகமான புத்தியும், பணத்துக்காக எதையும் செய்யும் ஈனத்தனமும் கொண்டவர் என்று கூறியிருந்தார். இறுதி வரையில் அவர்களை ஏற்கப்போவதில்லை என்ற முடிவில் இருந்து வருகிறார் ராஜ் கிரண்.

தொலைக்காட்சி அரங்கேற்றிய திருமணம்

தற்போது அந்த தம்பதியினர் ராஜ்கிரணின் மனைவியை சந்தித்து அவரிடம் தஞ்சம் புகுந்துள்ளார்களாம். எப்படியாவது அப்பாவை சமாதானப்படுத்தி ஏற்றுக்கொள்ள வேண்டி அவரிடம் கெஞ்சி இருந்தனர் தம்பதியினர்.

இந்நிலையில் ஜூ தமிழ் தொலைக்காட்சி ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சியில் சீதா ராமன் என்ற நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. அதில் முனிஷ் ராஜா மற்றும் ராஜ் கிரண் வளர்ப்பு மகளின் திருமணமும் அரங்கேறியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.