கவுண்டமணியை பழிவாங்க ராஜ்கிரண் போட்ட திட்டம்!! வசமாக மாட்டி வைகைப்புயலான வடிவேலு..
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் என்றால் கவுண்டமணி - செந்தில் தான். அப்படி அவர்கள் இல்லாமல் 80, 90களில் படமே வராது. அப்படி வந்தால் அப்படம் சூப்பர் ஹிட் என்று கூறும் அளவிற்கு ரசிகர்கள் அவர்களுக்கு இருந்தனர்.
ஆனால் அதை உடைத்து வளர்ச்சி பெற்று தற்போது டாப் இடத்தில் இருந்து வருகிறார் வைகைப்புயல் வடிவேலு. நடிகர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் அளித்த பேட்டியில், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனராக திகழ்ந்து வரும் ராஜ் கிரணுக்கு சினிமா பின்புலம் இல்லாமல் இருக்கும் மற்றவர்களை சினிமாவில் தூக்கிவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.
ராஜ்கிரண் படத்தில் நடிகர் கவுண்டமணி தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்தார். திடீரென கவுண்டமணியின் சிலநடவடிக்கை பிடிக்காமல் போகவே, அவருக்கு பதில் ஒரு நகைச்சுவை நடிகரை உருவாக்கினால் என்ன என்று நினைத்துள்ளார்.
அப்போது அவரது அலுவலகத்தில் வேலை செய்யும் முருகேசன் என்பவர் தான் வடிவேலுவை ராஜ்கிரணிடன் அறிமுகப்படுத்தி தன் திறமையை காட்டி ஈர்த்தார். அது ராஜ்கிரண் இல்லை என்றால் வடிவேலு இல்லை.
நடிப்பை தாண்டி வடிவேலுவை பாட வைத்த பெருமையும் ராஜ்கிரணையே சேரும் என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.
ராஜ்கிரண், இசைஞானியிடன் வடிவேலுவை கூட்டிச்சென்று கிராமத்து பாடல் எல்லாம் நன்றாக இவன் பாடுவான் என்று கூறியிருக்கிறார். இளையராஜாவுக்கு பிடித்து போக வடிவேலுவை பின்னணி பாடகராக்கியது ராஜ்கிரண்.