28 வயது பாகிஸ்தான் நடிகையுடன் சல்மான் கான் திருமணம்!! அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகை..
சல்மான் கான்
பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகராக திகழ்ந்து வரும் சல்மான் கான் சிகிந்தர் என்ற படத்தில் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 27 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இப்படத்தினை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கவுள்ளார் என்ற செய்தியும் உலா வருகிறது.
இதுவரை திருமணம் செய்யாமல் சிங்கிளாக இருக்கும் சல்மான் விரைவில் திருமணம் செய்யவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
28 வயது நடிகை
அதிலும் சல்மான் கான் திருமணம் செய்யப்போவது 28 வயதே ஆன பாகிஸ்தான் நடிகை என்று பாலிவுட் நடிகை ராக்கி சவாந்த் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ராக்கி சவாந்த் அளித்த பேட்டியொன்றில், பாகிஸ்தானை சேர்ந்த 28 வய்தான நடிகை ஹானியா அமீர் என்பவரைத் தான் திருமணம் செய்யவுள்ளார் என்று கூறியிருக்கிறார். அவர் கூறிய அந்த வீடியோவில் பலரும் ராக்கி சவாந்தை கண்டபடி திட்டியும் வருகிறார்கள்.