திருமணமாகி சில ஆண்டுகளில் விவாகரத்து.. சீரியல் நடிகை ரச்சிதா முடிவுக்கு இதுதான் காரணம்?
பிரபல தொலைக்காட்சி சேனலில் சில ஆண்டுகளுக்கு முன் ஒளிப்பரப்பாகி முடிந்த சீரியல் சரவணன் மீனாட்சி. இரண்டாம் சீசனில் மீனாட்சியாக நடித்து பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இந்த சீரியலில் கிடைத்த வரவேற்பால் பல சீரியல் வாய்ப்பினை பெற்றார்.
சமீபத்தில் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்து வந்த ரச்சிதா தொலைக்காட்சி சேனலில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவும் சினிமா வாய்ப்பின் காரணத்திற்காகவும் சீரியலில் இருந்து விலகினார். அதன்பின் வேறொரு தொலைக்காட்சிக்கு தாவி சொல்ல மறந்த கதை என்ற தொடரில் நடித்து வருகிறார்.
ரச்சிதா சில ஆண்டுகளுக்கு முன் தினேஷ் என்ற சீரியல் நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த இருவருக்கும் இடையில் சண்டைகள் ஏற்பட்டதால் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.
விரைவில் இருவரும் விவாகரத்து பெறப்போவதாகவும் கூறி வந்த நிலையில், தினேஷ் அப்படியான முடிவை இன்னும் எடுக்கவில்லை என்று கூறியிருந்தார். தற்போது தினேஷை பிரிந்து விவாகரத்து பெறவுள்ளதாக ரச்சிதா முடிவெடுத்துள்ளாராம்.
இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், தினேஷ் வேலையில்லாமல் சும்மா இருப்பதால் தான் ரச்சிதா கணவரை பிரிய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுபற்றிய இருவரும் சரியான தகவலை பறிமாறாமல் இருந்து வருகிறார்கள்.