நடிகை ரகுல் ப்ரீத் சிங் முகத்திற்கு என்ன ஆச்சு.. வைரலாகும் வீடியோ, ரசிகர்கள் ஷாக்
இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, NGK, இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
ஆனால், பாலிவுட் பக்கம் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். Mere Husband Ki Biwi என்ற படத்தில் சமீபத்தில் அவர் நடித்து இருந்தார். அடுத்ததாக Ameeri, De De Pyaar De 2 ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.
இந்த நிலையில், நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் வீடியோ ஒன்று இணையத்தில் திடீரென வைரலாகி வருகிறது. ரகுல் ப்ரீத் சிங் தனது காரில் இருந்து இறங்கி ஓட்டலுக்கு செல்லும்போது, அவரை புகைப்படம் எடுக்க அங்கு பத்திரிகையாளர்கள் காத்திருந்தனர்.
ஆனால், நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது முகத்தை மறைத்தபடியே அவசர அவசரமாக சென்றார். இதை பார்த்த பலரும், அவருக்கு என்ன ஆச்சு, ஏன் முகத்தை மறைத்தபடி சென்றார் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ..