திருமணத்திற்கு பின் லிப் லாக் காட்சியில் நடிப்பேன்.. வெளிப்படையாக பேசிய ரகுல் ப்ரீதி சிங்!!
தமிழ், தெலுங்கு,ஹிந்தி மொழி படங்களில் பிஸியாக நடித்து வருபவர் தான் நடிகை ரகுல் ப்ரீதி சிங் .இவர் நடித்த ஸ்பைடர் மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படத்தின் மூலம் பிரபல நடிகையாக மாறினார்.
நடிகை ரகுல், தனது நீண்ட நாள் காதலரான ஜாக்கி பகானியை கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் இவர் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
அண்மையில் இந்தியன் 2 படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரகுல் ப்ரீத் சிங்கிடம், உங்களை லிப் லாக் காட்சியில் நடிக்க சொன்னால் நடிப்பீர்களா? என்று கேள்வி கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த ரகுல் ப்ரீதி, அது கதையை பொறுத்து இருக்கிறது. ஏற்கனவே அந்த மாதிரி காட்சியில் நடித்து இருக்கிறேன். கதைக்கு பொருத்தமாக தேவையாக இருந்தால் நடிப்பேன். ஆனால் பப்லிசிட்டிக்காக லிப் லாக் காட்சியில் நடிக்க சொன்னால் நடிக்க மாட்டேன் என்று பதில் அளித்துள்ளார்.