ராம் சரணின் பெத்தி திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

Ram Charan Box office
By Karthick Raja Jun 17, 2026 06:30 AM GMT
Report

தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் ராம் சரண். இவர் நடிப்பில் ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் ஓப்பனிங் இருக்கும்.

அப்படி ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் பெத்தி. இப்படத்தை இயக்குநர் புச்சிபாபு இயக்கியிருந்தார். இப்படத்தில் ராம் சரணுடன் இணைந்து கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ் குமார் மற்றும் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடித்திருந்தனர்.

ராம் சரணின் பெத்தி திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Ram Charan Peddi Box Office

நடிகை ஸ்ருதி ஹாசன் ஒரே ஒரு பாடலுக்கு சிறப்பு நடனம் ஆடியிருந்தார். கடந்த ஜூன் 4-ஆம் தேதி திரைக்கு வந்த இப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில், இதுவரை 13 நாட்களை கடனத்திருக்கும் பெத்தி, உலகளவில் ரூ. 350 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

ராம் சரணின் பெத்தி திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Ram Charan Peddi Box Office