நெருக்கமான காட்சியில் நடிக்கும் போது அந்த மாதிரி உணர்வேன்.. நடிகர் ராம் சரண் மனைவி ஓபன் டாக்
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராம் சரண். தற்போதுஇவர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் கேம் செஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார்.
நடிகர் ராம் சரண் கடந்த 2012-ம் ஆண்டு உபாசனா காமினேனி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ராம் சரணின் மனைவி, "என்னுடைய கணவர் மற்ற நடிகைகளுடன் அந்தரங்க காட்சியில் நடிக்கும் போது, நான் மிகவும் சங்கடமாக உணர்ந்தேன். அதற்கு காரணம், நான் எந்த ஒரு சினிமா பின் புலம் இல்லாதவர். அதனால் இதெல்லாம் எனக்கு கஷ்டமாக இருக்கும்".
"நான் அவரிடம் நடிகைகளுடன் இப்படி நடித்து தான் ஆக வேண்டுமா என்று பல முறை அவரிடம் கேட்டு இருக்கிறேன்
அதற்கு அவர், என்னுடைய தொழில் இது தான், இப்படி தான் இருக்கும் என்று எனக்கு புரியவைத்தார். சில தொழில்நுட்பங்கள் குறித்தும் விளக்கம் கொடுத்தார்" என்று உபாசனா காமினேனி கூறியுள்ளார்.