அப்படி செய்ய சொல்லி கட்டாயப்படுத்திய இயக்குநர்..மயங்கி விழுந்த ஸ்ரீதேவி!! என்ன நடந்தது தெரியுமா?
ஸ்ரீதேவி
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து பல மொழிகளில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து புகழ் பெற்றவர்தான் நடிகை ஸ்ரீதேவி. கடந்த 2018ல் மர்மமான முறையில் மரணமடைந்தது அனைவருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில், இயக்குநர் பங்கஜ் பராஷர் ஒரு உண்மை சம்பவத்தை பகிர்ந்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அதில், Kshana Kshanam என்ற படத்தில் இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் நடிகை ஸ்ரீதேவி நடித்தார். அப்படத்திற்காக ஸ்ரீதேவியிடம் எடையை குறைக்க வேண்டும் என்று கூறியிருக்கிரார். ராம் கோபால் வர்மாவுக்கு ஸ்ரீதேவியின் மீது நீண்டநாள் காதல் இருந்தது அப்போதைய காலக்கட்டத்தில் அனைவரும் அறிந்தது.
கட்டாயப்படுத்திய இயக்குநர்
ஆனால் இயக்குநராக இருந்தபோது ஸ்ரீதேவிக்கு crash diet என்ற கடுமையான உணவுக்கட்டுப்பாட்டை செய்யச்சொல்லி கட்டாயப்படுத்தினார். இந்த உணவியல் முறையால், ஸ்ரீதேவி துளி உப்பைக்கூட உணவில் தர்வித்ததாக கூறப்பட்டது. இதன் விளைவால், ஸ்ரீதேவியின் ரத்த அழுத்தம் மிகவும் குறைந்து, ஒருநாள் அவர் திடீரென மயங்கி விழும்போது, அவர் பக்கத்தில் இருந்த டேபிளில் தலை மோதி சுருண்டு விழுந்து பல் உடைந்துவிட்டது என்று இயக்குநர் பங்கஜ் பராஷர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஸ்ரீதேவியை சுயநினைவுக்கு கொண்டு வர நாங்கள் 20 நிமிடங்களுக்கு மேல் முயற்சி செய்தோம். ஆனால் இந்த சம்பவத்தால் அந்த படத்தின் ஷூட்டிங் ஷெட்யூல் முழுவதும் விணாகிவிட்டது.
இச்சம்பவத்திற்கு பின், நான் இயக்கிய மேரி பிவி கா ஜவாப் நஹீ படம் முற்றிலுமாக தள்ளிப்போனது. நிதியுதவியாளர் விலகினார், தயாரிப்பாளர் மரணம் அடைந்தார். இதனால் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. 2004ல் மிகக்குறைவான தரத்தில் பல ஆண்டுகள் கழித்து படம் வெளியிடப்பட்டது.
தொழில் மீதான ஒழுக்கத்திற்கு பேர் போன ஸ்ரீதேவிக்கு நேர்ந்த இந்த சம்பவம் ஒரு நடிகை தன் உடலை எவ்வளவு அர்ப்பணிப்பார் என்பதை காட்டுகிறது. இயக்குநரின் கற்பனைக்காக ஒரு நடிகையின் உடல்நலமே பாதிக்கப்பட வேண்டுமா? என்பது சிந்திக்க வைக்கும் என்று பங்கஜ் பராஷர் தெரிவித்துள்ளார்.