சக நடிகரின் முன்னாள் மனைவியை திருமணம் செய்த விகே ராமசாமி? புது தகவல்..
விகே ராமசாமி
தமிழ் சினிமாவில் 1947-களில் இருந்து 90ஸ் வரை காமெடி நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் திகழ்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் வி கே ராமசாமி.
சிறுவயதிலேயே பொன்னுசாமி பிள்ளையின் பால கான சபாவில் சேர்ந்து, தன்னுடைய திறமையை வெளிக்காட்டி வந்தார். 21 வயதில், ஏவிஎம் பிலிம்ஸின் முதல் படமான ’நாம் இருவர்’ (1947) படத்தின் மூலம் அறிமுகமாகினார்.
அதிலும் முதல் படத்தில் 60 வயது கிழவன் ரோலில் நடிக்க ஆரம்பித்து நன்கு வளர்ந்தப்பின் மகனின் தந்தையாக நடித்தார். 55 ஆண்டுகள் சினிமா வாழ்க்கையில் அவர் நடிக்காத வேடங்களே இல்லை.
காமராஜர் மீதான அன்பின் மிகுதியால் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டும் வந்தார். ரமணி அம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இத்தம்பதியருக்கு ஆர் ரகு மற்றும் ரவிகுமார் என இரு மகன்கள் இருக்கிறார்.
எம் ஆர் ராதாவின் மனைவி
அதாவது, எம் ஆர் ராதாவின் மனைவியாக இருக்கும் போது தான் இந்த இரு மகன்கள் பிறந்துள்ளனர். ரமணி அம்மாள் நடிகர் எம் ஆர் ராதாவின் மனைவி. இருவரும் காதலித்து திருமணம் செய்த நிலையில், இவ்விரு மகன்கள் பிறந்துள்ளனர். எம்ஜிஆரை துப்பாக்கியால் சுட்ட எம் ஆர் ராதா கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். அதன்பின் கருத்து வேறுபாட்டால் எம் ஆர் ராதாவை பிரிந்தார் ரமணி அம்மாள்.
வி கே ராமசாமியுடன் திருமணம்
அப்போது, தனியாக இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த ரமணி அம்மாள், வி கே ராமசாமியின் நாடக்குழுவில் சேர்ந்துள்ளார். அப்போது ரமணி சந்தித்த துயரங்களை பார்த்த வி கே ராமசாமி அவருடன் பழகி காதலித்தார். அதன்பின் ரமணி அம்மாளை இரண்டாம் திருமணம் செய்த நிலையில், இரு மகன்களையும் தத்துப்பிள்ளைகளாக அறிவித்து பின் வாரிசாகவும் அறிவித்தார் விகே ராமசாமி அறிவித்தார். கடந்த 2002ல் விகே ராமசாமி மரணமடைந்தார்.