கீர்த்தி சுரேஷ் தான் சூப்பர் நடிகை.. மேடையில் உண்மையை உடைத்த ராமராஜன்..

Ramarajan Keerthy Suresh
By Edward Oct 25, 2022 03:16 PM GMT
Report

70, 80 களில் ரஜினி, கமலுக்கு டஃப் கொடுக்கும் ஒரு நடிகராக கொடிக்கட்டி பறந்தவர் நடிகர் ராமராஜன். அவர் நடித்த கரக்காட்டக்காரன் படம் 400 நாட்களுக்கும் மேல் ஓடி சாதனையை படத்தது.

அப்படி இருந்த ராமராஜன் நளினியை திருமணம் செய்து பின் பல ஆண்டுகள் கழித்து விவாகரத்து பெற்று பிரிந்தார். விவாகரத்துக்கு பின்பும் மனைவியை வெறுக்காமல் தொடர்பில் பேசியும் குழந்தைகளை கவனித்தும் வருகிறார். நடிப்பை விட்டுவிட்ட ராமராஜன் 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

அவரது 45வது படமாக சாமானியன் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசிய ராமராஜன், இப்போது நடிக்கும் நடிகைகள் நன்றாக நடித்து வருவதாகவும் சினிமாவில் நடிக்க நிறைய கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் சரோஜாதேவி, சாவித்ரி, கே ஆர் விஜயா வரிசையில் தனக்கு பிடித்த நடிகை என்றால் அது கீர்த்தி சுரேஷ் தான் என்று கூறியுள்ளார். மகாநதி படத்தில் அவரின் நடிப்பு நேர்த்தியாக இருந்தது என்று மேடையில் கீர்த்தி சுரேஷை புகழ்ந்துள்ளார்.